நீதிமன்றத் தாக்குதல் சம்பவம்: இருவருக்குப் பிணை! ஏனையோருக்கு விளக்கமறியல்!!

282

 

கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 130 பேரில் 47 பேர் இன்று யாழ். நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இவர்களில் 16 வயதுக்குக் உட்பட்ட இருவருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது. ஏனையோருக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

jaffna court 562554 viththi_court_018

.இவர்கள் மீதான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிவான் 16 வயதுக்குக் கீழ்பட்ட இரு மாணவர்கள் தலா 5லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டனர். ஏனைய 45 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 16 வயதுக்கு மேற்பட்ட 7 மாணவர்களுக்கும் தாங்கள் கல்வி பயிலும் பாடசாலை அதிபரின் சத்தியக் கடதாசியை மன்றில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான பிணை தொடர்பில் மன்று பரிசீலிக்கும் என நீதிவான் தெரிவித்துள்ளார்

 

SHARE