நீதிமன்றம் பிரதமரை பதவி நீக்கம் செய்ததால் ராணுவ கட்டுப்பாட்டில் தாய்லாந்து

435

பாங்காக் : தாய்லாந்து பிரதமர் இங்லுக் ஷினாவத்ரா. இவரது மக்கள் விரோத ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல மாதங்களாக பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் நடந்து வந்தன. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றமே முன்வந்து பிரதமர் இங்லுக் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள 9 அமைச்சர்களையும் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து தாய் லாந்து ராணுவம், நாட்டின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் நேற்று கொண்டு வந்தது. இது குறித்து அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி பிரயூத் சான் –  ஓச்சா கூறியதாவது:

நீதிமன்றம், பிரதமரை பதவி நீக்கம் செய்தால் நாட்டின் நிர்வாகத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று தாய்லாந்தில் 1914ல் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதனால், நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டவும், சட்டம்-ஒழுங்கு நிலைமையை பாதுகாக்கவும், ஆட்சி அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் ராணுவம் கொண்டுவந்துள்ளது.தாய்லாந்தில் கடந்த 1932ல் இருந்து 11 முறை ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ராணுவ புரட்சி என்று மக்கள் யாரும் நினைக்க வேண்டாம். தற்போது, வானொலி நிலையங்கள், டிவி சேனல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. எந்த செய்தி நிறுவனங்களும் ராணுவத்தின் முன் அனுமதியின்றி செய்திகளை வெளியிடக் கூடாது. மக்கள் எப்போதும்போல சாதாரணமாக நடமாட வும், வியாபாரம் செய்யவும் அனுமதிக்கப்படவார்கள். இவ்வாறு ராணுவ தளபதி பிரயூத் சான் ஓச்சா கூறினார்.

SHARE