நீதியரசர் சரத் ஆப்றூ கல்கிஸை நீதிமன்றத்தில் சரண்

125
உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூ, சட்டத்தரணிகள் சகிதம் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் சரணடைந்துள்ளார். தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பணிப்பெண் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரை கைது செய்யமுடியும் என்று இரகசிய பொலிஸ் விசாரணை அறிக்கையை பொலிஸார், சட்டமா அதிபரிடம் நேற்று கையளித்துள்ளனர்.

இதனையடுத்தே சட்டமா அதிபர், இரகசிய பொலிஸாருக்கு நீதியரசரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இந்த நிலையில், அவர் நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

SHARE