நீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மான் குட்டியை நீச்சல்போட்டு மீட்டு வந்த பப்பி: வீடியோ

824

நீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய மான் குட்டியை, நாய் ஒன்று நீச்சலடித்து மீட்டு வந்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

உயிரினங்களிலேயே மனிதன் தான் பகுத்தறிவு படைத்தவன். ஆனாலும், சில விஷயங்களில் விலங்குகள் கூட பகுத்தறிவு பெற்றதாகவே தோன்றுகிறது. அன்பு என்றால் என்ன என்பதை வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளே நமக்கு கற்றுக் கொடுத்துவிடும்.

இந்த வீடியோவில் வரும், நாயின் பெயர் ஸ்டோர்ம். இந்த ஸ்டோர்ம் செய்வது நெகிழ்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆம், நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது ஒரு குட்டி மான். இதைக்கண்ட ஸ்டோர்ம் நீருக்குள் பாய்ந்து நீச்சல் அடித்து, உயிருக்கு போராடிய மான் குட்டியை பாதுகாப்பாக கரைக்கு மீட்டு வருகிறது.

அந்த மான் குட்டியை கரைக்கு மீட்டுவந்ததோடு மட்டுமல்லாமல், அதன் உடல் முழுவதும் நாக்கினால் நக்கி விடுவது மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த சம்பவத்தை அந்த நாயின் உரிமையாளர் வீடியோவாக எடுத்துள்ளார்.

SHARE