நெடுங்கேணியில் வீதியோரமாக இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

304

வவுனியா நெடுங்கேணி கந்தரோடை கிராமத்தின் வீதியோரத்தில் இருந்து இளைஞனொருவரின் சடலத்தினை நெடுங்கேணி பொலிஸார் மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இன்று காலை (8.4) கந்தரோடை பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட இச் சடலத்தினை மீட்ட பொலிஸார் தனியார் வாகனமொன்றின் மூலமாக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இந் நிலையில் பொது வைத்தியசாலையில் மரணடைந்தவரின் மனைவியான பி. விஸ்னுகா இறந்தவர் 38 வயதுடைய அருளப்பு பிரகலாதன் என்ற தனது கணவரே என சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

இந் நிலையில் இம் மரணம் எவ்வாறு சம்பவித்தது என்பது தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படங்கலும் தகவலும்:- சுகந்தன்

 

 

 

 

படங்களும் தகவலும் :- காந்தன்

SHARE