நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்! 6.5 ரிக்டர் அளவில் – பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு

285

 

நேபாளத்தில் இன்று காலை 6.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று தாக்கிய நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக இன்றும் மிகவும் மோசமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்டடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் மட்டுமல்லாமல், வட இந்தியா, வங்கதேசத்திலும் இன்றைய நிலநடுக்கம் உணரப்பட்டதோடு, எவெரெஸ்ட் பிராந்தியத்தில் புதிதாக பனிச்சரிவுகளையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியா மற்றும் சீனாவின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான விமானங்களும் காத்மண்டுவிற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அடுத்த சிலநாட்களுக்கு நேபாளத்தில் மோசமான காலநிலையும் தொடர் மழையும் நிலவும் என்பதால், அங்கே நடக்கும் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

நேபாளத்தில் நேற்று 25 க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கட்டட இடிபாடுகளில் மேலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர், சிறிய அளவிலான கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 16 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் நேபாளம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின.

நேற்றைய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 4000 பேர் பலியாகியுள்ளதாகவும், கட்டட இடிபாடுகளில் மேலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

நேபாள நாட்டின் மையப்பகுதியில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் சனிக்கிழமை நண்பகல் 11.46 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர், சிறிய அளவிலான கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 16 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் நேபாளம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 4000 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கட்டடங்களின் இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புபப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

SHARE