நேபாள நாட்டின் கல்பதரு சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை

361
ஹர்ஷித் சவுமித்ரா, இந்த சாதனையை செய்வதற்காக, அவன் தனது தந்தை மற்றும் 2 வழிகாட்டிகளுடன் கல்பதரு சிகரத்திற்கு சென்றான். கடந்த 7ஆம்தேதி எவரெஸ்ட் மலை முகாம் வரை ஹெலிகாப்டரில் சென்ற ஹர்ஷித் சவுமித்ரா, பின்னர் அந்த இடத்தில் இருந்து 10 நாட்கள் பயணம் செய்து, கல்பதரு சிகரத்தில் ஏறி சாதனை புரிந்தான். பயணத்தின் இடையில் 2 நாட்கள் மட்டும் கூடாரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் பாலாஜி என்ற 7 வயது இந்திய சிறுவன் கல்பதரு சிகரத்தில் ஏறியது தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 5 வயது ஹர்ஷித் முறியடித்துள்ளான். இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது

SHARE