நைஜீரியாவில் பெண் தற்கொலைப்படை தாக்குதல்: ஜனாதிபதியை கொல்ல முயற்சி

365
நைஜீரியாவில் ஜனாதிபதியை குறிவைத்து பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.நைஜீரியாவில் வருகிற 14ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி குட்லக் ஜோனதனும், அனைத்து முற்போக்கு காங்கிரஸ்(ஏ.பி.சி) சார்பில் முன்னாள் சர்வாதிகாரி முகம்மது புகாரியும் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள காம்பே நகரில் நேற்று மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி குட்லக் ஜோனதன் கலந்து கொண்டார், கூட்டம் முடிந்தவுடன் அவர் புறப்பட்டு சென்றார்.

சிறிது நேரத்திலேயே கார் நிறுத்தும் இடத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது, இதில் இரண்டு பெண்கள் பலியாயினர்.

விபத்தில் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேர்தலை சீர்குலைக்கும் வகையில் பெண்கள் இருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

nigeria_blast_005

SHARE