நைஜீரியாவில் மனித வெடிகுண்டுகளாகும் அப்பாவி சிறுவர்கள்

323
நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் போகோ ஹராம் தீவிரவாதிகள் சிறுவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி வருவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.நைஜீரியாவில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக போராடி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து பல அட்டூழியங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த தீவிரவாத அமைப்பு குறித்து ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தி வரும் இவர்கள், இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஒன்றும் அறியாத சிறுவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

SHARE