நைஜீரியாவை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜெண்டினா

461
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் நைஜீரியாவும் அர்ஜெண்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் சாபெல்டா பவுல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் ஓடம் விங்கிக்கும் இதே காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி அற்புதமான கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே நைஜீரிய அணியின் மூசா தன் பங்குக்கு ஒரு கோலடித்து அசத்தினார். அதன் பின் இரு அணிகளும் கோல் போஸ்ட்டை அடிக்கடி முற்றுகையிட்டனர். பின்னர் ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ப்ரீ கிக் மூலம் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார் மெஸ்சி. அதோடு முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்ததாக நடுவர் அறிவித்தார்.

பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியபோது, 47வது நிமிடத்தில் நைஜீரியாவின் மூசா மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது. 50வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் ரோஜோ ஒரு கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை உயர்த்தினார்.

இறுதியில் ஆட்டம் முடிவடைந்தபோது அர்ஜெண்டினா நைஜீரியாவை 2-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகனாக அர்ஜெண்டினாவின் மெஸ்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SHARE