நோ பயர் சோன் திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்குமாறு மெக்ரே மைத்திரியிடம் கோரிக்கை

380
இலங்கையின் போர்க்குற்றங்களை சித்தரிக்கும் “நோ பயர் சோன்”; விவரணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கெலம் மெக்ரே கோரியுள்ளார்.

சிங்கள மொழியில் பிரதி செய்யப்பட்ட இந்த படம் நேற்று பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது.

இதன்போதே இலங்கையின் தொலைக்காட்சிகள் இந்த படத்தை காண்பிக்க வேண்டும் என்று மெக்ரே கோரிக்கை விடுத்தார்.

இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுக்கக்கூடாது என்றும் அவர் கோரினார்.

இதன்மூலம் போரின் போது நடந்த உண்மைகளை சிங்கள மக்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் மெக்ரே குறிப்பிட்டார்.

சமாதானத்தை விரும்பும் சிங்கள மக்கள் உண்மையை அறிந்துவிடக்கூடாது என்பதை பிழை செய்தோர் எண்ணம் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் தமது படத்தின் மூலம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தவில்லை என்றும் மெக்ரே சுட்டிக்காட்டியுள்ளார்.

 

SHARE