பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வந்தமை குறித்து எனக்கு எதுவும் தெரியாது-மஹிந்த

284

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வந்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கம்பஹாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கம்பஹாவில் அவரது அரசியலை செய்தார். நான் எனது அரசியலைச் செய்தேன். ஆ…. அவர் வந்தாரா? எனக்கு எதுவும் தெரியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

SHARE