படுமோசமான சாதனையை செய்த ரோஹித் சர்மாவை ”Vadapav” என கிண்டல் செய்யும் ரசிகர்கள்

24

 

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா அதிகமுறை டக் அவுட் ஆகி மோசமான சாதனையை செய்துள்ளதால் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் ரோஹித் ஷர்மா டக்அவுட் ஆனார். இது அவரது 17வது டக் அவுட் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆன தினேஷ் கார்த்திக்குடன் இணைந்துள்ளார் ரோஹித்.

இந்த நிலையில் ரசிகர்கள் ரோஹித் ஷர்மாவை ”Vadapav” என குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

IPLயில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள்
ரோஹித் ஷர்மா – 17
தினேஷ் கார்த்திக் – 17
பியூஸ் சாவ்லா – 15
மன்தீப் சிங் – 15
சுனில் நரைன் – 15
கிளென் மேக்ஸ்வெல் – 15

SHARE