படு கிளாமர் போட்டோ ஷூட் தமன்னா அதிரடி முடிவு 

756
படுகிளாமராக போட்டோ ஷூட் நடத்த திடீரென முடிவு செய்துள்ளார் தமன்னா.தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்த தமன்னா இந்தியில் கவனத்தை திருப்பினார். அவர் நடித்த முதல் படம் ஹிம்மத்வாலா கைகொடுக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹம்ஷகல்ஸ் என்ற படத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அத்துடன் படத்தில் அவர் நடிப்பு பற்றி விமர்சிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட தமன்னாவுக்கு பாலிவுட் கைவிட்டதை எண்ணி கலக்கம¢ அடைந்தார்.

தற்போது டாப் ஹீரோக்களின் கவனத்தை கவர புதிய திட்டம் வகுத்து வருகிறார். படுகவர்ச்சிக்கு மாறினால் வாய்ப்பு வருமா என்று நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறார். முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன், டூ பீஸ் உடையில் நடிக்க மாட்டேன். இது என் பாலிசி என்று நீ போடும் கண்டிஷன் பாலிவுட்டில் எடுபடாது. இந்த நிபந்தனைகளை தூக்கிப் போடும்வரை பெரிய படங்கள் வராது என்று நட்பு வட்டாரங்கள் கறாராக கூறிவிட்டார்களாம்.

மார்க்கெட்டை பிடிக்க தமன்னா தனது பாலிசியை காற்றில் பறக்க விட யோசித்துள்ளாராம். இதற்காக முதல்கட்டமாக டூ பீஸ் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி பாலிவுட்டில் பரப்பிவிடவும் திட்டமிட்டுள்ளாராம்

 

SHARE