பட்டுப்பாதை திட்டத்தில் இந்தியாவும் இணைய வேண்டும்: சீனா விருப்பம்

396
பண்டையக் காலங்களில் ஆசியாவின் தென் பகுதி இடையே தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது பட்டுப்பாதை என்று அழைக்கப்பட்டது. 6500 கி.மீக்கும் நீளமான இந்தப் பாதை இன்று சியான் எனப்படும் சீனாவின் சாங்கான் பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா நாடுகள் வரை பரவியிருந்தது. கடல் மற்றும் நிலப்பரப்புகளில் காணப்பட்ட இத்தகைய பாதைகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்று சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் விரும்புகின்றார். இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ள அவரது கனவுத் திட்டமான இதில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

வரலாற்றின் பார்வையில் கடல்வாழ் பட்டுப்பாதைக்கும், நில வழியிலான பட்டுப்பாதைக்கும் இந்தியா ஒருங்கிணைப்புப் புள்ளியாக இருந்துள்ளது. இரு தரப்பினரும் இதனால் பயனடைந்துள்ளனர் என்று சர்வதேச பொருளாதார விவகாரங்கள் துறையின் தலைவர் காவோ சென்டிங் தெரிவிக்கின்றார். மேலும் புதுப்பிக்கப்படும் இந்தத் திட்டங்களினால் சோர்ந்துபோன சீனாவின் ஏற்றுமதி சந்தை அதிகரிக்கத் தொடங்குவதுடன் உலகளவில் அந்நாட்டின் செல்வாக்கும் அதிகரிக்கும் என்று சீனா எதிர்பார்க்கின்றது.

இயல்பாகவே இந்தியாவும் இந்தப் பாதை இணைப்பில் ஒரு முக்கியப் பங்காளி என்று சீனா நம்புகின்றது. எங்களின் அனைத்து அண்டை நட்பு நாடுகளும் இதில் பங்கேற்பதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் யாரையும் இதற்காக வற்புறுத்துவதாக இல்லை என்றும் காவோ குறிப்பிட்டுள்ளார்.

SHARE