பணக்கார நடிகர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் ஷாருக்கான்!

472

மே 23 – உலக பணக்கார நடிகர்களில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் ஜானிடெப்  இருவரையும் பின்னுக்குத் தள்ளிவி்ட்டு  2-வது பெரும் பணக்காரர்  இடத்தை பிடித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வயது  48. இதுவரை  பாலிவுட்டில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்ப துடன், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஐபிஎல் டீம்  ஒன்றின் உரிமையாளராகவும் உள்ளார். தமிழிலும், ஹே ராம், உயிரே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். உலக பணக்கார நடிகர்கள்  பட்டியலில் இவர் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர் . அதாவதது, இந்திய ரூபாய் மதிப்பில்  ரூ.3515 கோடி.  இவருக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் இருப்பவர் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்.  இவரது சொத்து மதிப்பு ரூ.2812 கோடி.  முதலிடத்தில் ஹாலிவுட் காமெடி நடிகர் ஜெர்ரி சென்பீல்டு உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 4804 கோடி. டைலர் பெர்ரி மற்றும் ஜானி டெப்  இருவரும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் சொத்து மதிப்பு தலா ரூ. 2636 கோடி. இந்த தகவலை சர்வதேச புள்ளி விவர சேகரிப்பு அமைப்பு ஒன்று ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

SHARE