பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார் மன்னார் ஆயர்.

215

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக கத்தோலிக்கத் திருச்சபைக்கு அறிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுகவீனம் காரணமாகவே, மன்னார் ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விண்ணப்பித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் கொழும்பு சென்ற கொண்டிருந்த போது, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, மாரடைப்பினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலதிக சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே அவர் ஆயர் பணியில் இருந்து ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெறுவதற்கு பாப்பரசர் அனுமதி அளித்த பின்னர், புதிய ஆயர் நியமனம் தொடர்பாகவும் வத்திக்கானில் இருந்து அறிவிப்பு வெளியிடப்படும்.

அண்மையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பணியில் இருந்து கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை ஆண்டகை விருப்ப ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE