பணி நேரம் முடிந்ததும் வேலை செய்வதை நிறுத்தும் சுட்டி..! வியத்தகு தொழில்நுட்பம்

285

 

பணி நேரம் முடிந்ததும் வேலை செய்வதை நிறுத்திக்கொள்ளும்படியாக ஒரு சுட்டியை (மவுஸை) அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், பேலன்ஸ் மவுஸ் (Balance Mouse) என்ற ஒன்றைத் தயாரித்துள்ளது.

திட்டமிடப்பட்ட அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை செய்வதை தவிர்க்கும் விதமாக இதனை உருவாகியுள்ளதால் அதிக நேரம் வேலை செய்வதைத் தடுக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த படைப்பாற்றல் மிக்க மவுஸ் அலுவலக நேரத்திற்கு மேல் வேலை செய்தால் நம்முடைய கை அசைவை வைத்து, அந்நேரத்தில் வேலை செய்யாமலும், பணியாளர்களின் கைகளுக்கு கிட்டாமலும் குறிப்பிட்ட இடத்தில் இருந்து நகர்ந்துக் கொண்டே இருக்கும்படி வடிவமைத்துள்ளனர்.

SHARE