பதுளையில் பஸ்ஸொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் நபரொருவர் பலியாகியுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

327

பதுளையில் பஸ்ஸொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் நபரொருவர் பலியாகியுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

கந்தேகெதர வீதியில் பயணித்த பஸ், முச்சக்கரவண்டிக்கு வழி கொடுக்க முனைந்த போது சீனகெலை சந்தியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 17 பேர் கந்தேகதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் வண்டியின் சாரதி பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE