பதுளை கொஸ்லாந்தை மண் சரிவால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளின் துயர் துடைக்க முன்வருவோம்…. வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்..
இன்று காலை 04-11-2014 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நகரின் பிரதான தளபாட விற்பனை நிலயத்தினரினால் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொண்டர்களும் நலன்விரும்பிகளும் மன்னார் பேசாலை கிராமத்தில் இன்றைய நிவாரணப் பொருட்கள் திரட்டும் பயணத்தினை மேற்கொண்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு தமது உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் அமைச்சர் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
TPN NEWS