பன்ச் ஹோல் ஸ்கிரீன்..! ஐபோன் 16 ப்ரோ குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்

109

 

பன்ச் ஹோல் ஸ்கிரீன் மற்றும் பிரம்மாண்டமான டிஸ்ப்ளே உடன் ஐபோன் 16 உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்ச் ஹோல் ஸ்கிரீன்
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து தங்களுடைய ஐபோன் மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்து பயனர்களை ஈர்த்து வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டுள்ள ஐபோன் 15 சீரிஸ் வரை தனது டிஸ்ப்ளே-களில் நாட்ச் ரக டிசைனை மிகவும் கவனமாக வழங்கி வருகிறது.

அதே சமயம் மென்பொருள் புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து ‘டைனமிக் ஐலேண்ட்’ எனும் புதிய அம்சத்தை சமீபத்தில் வெளியாகி இருந்த மாடல்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 ப்ரோ மாடலில் தங்களது வழிமுறையை மாற்றுவது குறித்து திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஐபோன் 16 ப்ரோ ரக மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே வழஅங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம் ஐபோன் 15 ரக மாடல்களை விட ஐபோன் 16 ரக மாடல்களில் பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

SHARE