பரிதாபத்தில் பாகிஸ்தான்….

333

பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒரே ஒரு ‘டி20’ போட்டியில் பங்கேற்றது.

மிர்புரில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு முக்தர் அக்மத் (37) நல்ல தொடக்கம் தந்தார். ஷேசாத் (17), அப்ரிடி (12) நிலைக்கவில்லை. முகமது ஹபீஸ் 26 ஓட்டங்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 141 ஓட்டங்கள் எடுத்தது. ஹாரிஸ் சோகைல் (30) அவுட்டாகாமல் இருந்தார்.

எளிய இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (14), சவுமியா சர்கார் (0) அதிர்ச்சி தந்தனர். முஷ்பிகுர் ரஹிம், 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின் சாகிப்-அல்-ஹசன், சபிர் ரஹ்மான் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இருவரும் அரைசதம் அடிக்க, வங்கதேச அணி 16.2 ஓவரில் 143 ஓட்டங்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாகிப் (57), சபிர் (51) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சபிர் ரஹ்மான் வென்றார்.

ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என இழந்த பாகிஸ்தான் அணி, நேற்று ‘டி20’ போட்டியிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.

images (1)

SHARE