பலாத்காரமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் நிபுணரும் தலைவருமான ஏரியல் டலிட்ஹி எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளார்.

342

பலாத்காரமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் நிபுணரும் தலைவருமான ஏரியல் டலிட்ஹி எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இவரின் விஜயம் அமையவுள்ளது.

இதன்போது போரில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறைக்கு உதவியளிக்க அவர் உத்தேசம் கொண்டுள்ளார்.

அவரும் அவரின் குழுவினரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள்.

இந்தக்குழுவினர் காணாமல் போனோரின் உறவினர்கள், அரசாங்கத் தரப்பினர் மற்றும் சமூக அமைப்பினரை சந்திக்கவுள்ளனர்.

ஆர்ஜன்டீனாவை சேர்ந்த டலிட்ஹி 2010ஆம் குறித்த செயற்குழுவுக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஏற்கனவே இந்தக்குழுவின் வருகை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கடந்த வாரம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

jaffna_tamilwin_1

SHARE