பல்கலைக்கழகத்திற்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிகை வரையறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

330

 

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி – கொழும்பு வீதி சந்தியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்திற்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிகை வரையறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழங்களுக்கு மாணவர்கள் சேர்ப்பதை அதிகாரிகள் வரையறுத்துள்ளதாக அவர்கள் கூறினர்.

களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழங்களில் இதனை தெளிவாக காண முடிவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

SHARE