பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

21

 

தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று தொடக்கம் 48 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.

கொழுப்பு – காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டித்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு (Photos)

அகில இலங்கை பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் 48 மணிநேர தொடர்ச்சியான அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் பட்சத்திலும் இப் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ச்சியாக 48 மணி நேரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

SHARE