பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு முறைப்பாடு

190

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் மற்றும் எதேச்சதிகாரப் போக்குகள் குறித்து வெளிநாட்டுத் தூதரகங்கள் சிலவற்றுக்கு இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எழுத்துமூல முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளது.

இலங்கையிலுள்ள பிரிட்டன் தூதுவர் காரியாலயம், அவுஸ்திரேலிய தூதுவர் காரியாலயம், சீனத் தூதரகம் மற்றும் ரஷ்யத் தூதரகம் ஆகியவற்றுக்கு இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் நவீன் டீ சொய்சா தெரிவித்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் தங்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்க பிரிட்டன் தூதுவர் சம்மதம் தெரிவித்துள்ளார் எனவும், அடுத்த சில தினங்களில் இந்த முறைப்பாட்டின் பிரதிகளை ஏனைய நாட்டுத் தூதரகங்களுக்கும் கையளிக்கவுள்ளதாகவும் டாக்டர் நவீன் டீ சொய்சா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE