பல்லவர்கள் நகரில் விஜய்யின் ‘புலி’ ஆடியோ விழா! 

157
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது என்றும், ஆனால் விழா நடக்கும் இடம் முடிவாகவில்லை என்றும் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் இப்போது ’புலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தை உறுதி செய்துள்ளனர்.

 

பல்லவர்களின் நகரமான மகாபலிபுரத்தில் அமைந்துள்ள Extravagant Confluence Resort -ல் ‘புலி’ ஆடியோ விழா ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் படத்தில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களும் பங்கேற்க இருப்பதோடு, தமிழ் சினிமாவின் மற்ற பல பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய்யின் ‘புலி’யை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளையும் துரிதப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்!

 

SHARE