தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொள்வதற்காக வட மாகாணத்திற்கு இன்று ஜனாதிபதி விஜயம் செய்தார். இதன்போது மடு தேவாலயத்திற்கும் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது ஜனாதிபதியை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் வரவேற்றதுடன் சமய வழிபாடுகளையும் தலைமை தாங்கி நடத்தினார். அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை அடிக்கடி மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல கொலைகளைச் செய்த கைகளை முத்தமிடும் அருட்தந்தையை யேசு மன்னிப்பாரா?? அல்லத ஆயர்தான் ஏற்பாரா? மடு மாதாவை இடம் பெயரச் செய்து எத்தனை தமிழ் உயிர்களை இரத்தம் குடித்த இந்த கைகளை முத்தமிடுவது எத்தனை நியாயம்…
இது கிறஸ்தவ திருச்சபைக்கு எதிரான கருத்தல்ல மாறாக ஏன் பொது அமைப்புக்கள் தடுமாறுகின்றது. தமிழ் இனத்தின் மகத்தான வழிகாட்டியாக இருக்கும் மன்னார் ஆயரின் அருகிலா இப்படி ஒரு செயல்…
இதே அருட்தந்தையே மடு தேவாலயம் விடுவிக்கப் பட்ட பின்னர் முரனான கருத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்.
மகிந்தவின் கைகளை முத்தமிட மைத்திரியே விரும்பாத நிலையில் இவ் அருட்தந்தை முத்தமிடுவது தகுமா? யேசுவே தயங்குவார், புனிதர் நிலையில் உள்ள அருட்தந்தை முத்தமிட்டது யுதாசின் செயலுக்கு ஒப்பானதா?? மன்னார் ஆயரே தமிழ் மக்களின் மனங்களை கயப்படுத்தாத உத்தமர் நீங்கள்…
உங்களை சந்தித்தது தவறல்ல நீங்கள் மதத் தலைவர் உங்களை பலரும் சந்திக்க வருவர் அது பிழையல்ல, உங்களின் பணியின் முக்கியம். மாறாக முத்தமிடுவது மட்டுமே இன்றைய தமிழ் மக்களின் கவலை…