பள்ளிவாசலுக்கும் செல்வதற்கு தனக்கு தடை விதிக்கப்படவில்லைஅஸ்வர்- எம்.பி

499

பள்ளிவாசலுக்கும் செல்வதற்கு தனக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும், அவ்வாறு தடை விதிக்கவும் முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். தேசிய பொது வழிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய காமினி ஜெயவிக்ரம பெரேரா, கசினோ சூதாட்ட சட்டத்துக்கு அஸ்வர் எம்.பி. ஆதரவு வழங்கியதாகவும் அவருக்கு பள்ளிவாசல்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த அஸ்வர் எம்.பி., அவ்வாறு எந்த பள்ளிவாசலும் தடை விதிக்கவில்லை எனவும் அவருக்கே (காமினி ஜெயவிக்ரம பெரேரா) பன்சலைகளுக்கு செல்ல தடை உள்ளதாக தெரிவித்தார். இஸ்லாத்துக்கு எதிராக அவர் கருத்து தெரிவிப்பதாக தெரிவித்த அஸ்வர் எம்.பி, சபையில் தவறான கருத்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.

SHARE