பவன் கிருபலானி மான் வழக்கையை படமாக இயக்குகிறார்…

371

ராகினி எம்எம்ஸ்., தார் அட் தி மால் போன்ற படங்களை இயக்கியவர் பவன் கிருபலானி. இவர் அடுத்தப்படியாக சட்டத்திற்கு புறம்பாக விலங்குகள் கொல்லப்படுவதை படமாக்க இயக்குகிறார். அதிலும் ப்ளாக் பக் என்ற சொல்லப்படும் அரியவகை மான்கள் கொல்லப்படுவதை படமாக இயக்க இருக்கிறார். இப்படி ஒரு கதையை அவர் படமாக இயக்க இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக மான் வேட்டையாடி கொல்லப்பட்டது தொடர்பாக பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், தபு, நீலம், சோனாலி பிந்த்ரே, சைப் அலிகான் ஆகியோர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பவன் கூறுகையில், விலங்குகள் கொல்லப்படுவதை மையமாக வைத்து தான் படமாக இயக்க இருக்கிறேன். இதுதொடர்பாக நான் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளவில்லை. சூப்பர்நேட்ச்யூரல் சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்குகிறேன் என்றார்.

இப்படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை, இவையெல்லாம் முடிவானபிறகு படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ஷூட்டிங் ஆரம்பமாகும் என தெரிகிறது.

 

SHARE