பஸ்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் வழங்கியமை குறித்த விசாரணை

317
அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் வழங்கியமை குறித்ததான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பஸ்களுக்கு கேள்விபத்திரம் கோராமல் நியாயமற்ற முறையில் தற்காலிகமாக அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் அவ்வாறான அனுமதி பத்திரங்களை இரத்து செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரைசொகுசு பஸ்களின் தரம் குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும்,

மக்கள் மேலதிக பணத்தை போக்குவரத்திற்கு வழங்குவதால் அதற்கேற்றாற்போல் பஸ்களின் தரமும் காணப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE