பஸ்ஸில் இருந்து கழன்ற டயர்கள்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்

366
ஹற்றனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் இரண்டு டயர்கள் கழன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹற்றன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட், நியூவெளி பகுதியில் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையில், பஸ்ஸின் பிற்பகுதியில் உள்ள இரண்டு டயர்களும் கழன்றுள்ளன.

இன்று காலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அதிக வேகமாக சென்றதாலையே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பயணித்த 20 பேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் தெய்வாதீனமாக உயர் தப்பியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

 

SHARE