பாகிஸ்தானின் பஞ்சாபி மாகாணத்தில் இளம் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

450

 

 

பாகிஸ்தானின் பஞ்சாபி மாகாணத்தில் இளம் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பஞ்சாபி மாகாணத்தில் லையா என்ற கிராமப்பகுதி உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 20 வயதான முசம்மில் பிபி என்ற இளம்பெண் திடீரென காணாமல் போயிருந்தார்.

அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில், மறுநாள் அருகில் உள்ள வயல்வெளி பகுதியில் ஒரு மரத்தில் இளம்பெண்ணின் உடல் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. அவரது உடைகள் கிழிக்கப்பட்டு இருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது குறித்த பெண் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கற்பழிப்பு முயற்சியின் போது அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த கும்பல் இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE