பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் 8 தீவிரவாதிகள் பலி

389
பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் அமைதியிழந்து காணப்படும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

வடக்கு வசிரிஸ்தானின் ஷவல் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் இன்று நடந்த இந்த தாக்குதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் எந்த தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

இந்த ஆண்டில் பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய முதல் ஆளில்லா விமானத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது

SHARE