பாகிஸ்தானில் பல நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு

13

பாகிஸ்தானில் இன்று காலை 7.30 மணி அளவில் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்கபட்டது. கராச்சியில் 90 சதவீதம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சீரற்ற மின் வினியோகம் காரணமாக மின்சாரம் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் ஊழியர்கள் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பெரிய அளவில் மின்சாரம் தடைபட்டதால் சீரமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 22 மாகாணங்களில் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள். அவர்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள்.

maalaimalar

SHARE