பாகிஸ்தானுடன் கடைசி டெஸ்ட்: துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி

182
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.இலங்கை சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதன் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரம் காட்டும்.

இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா, பந்து வீச முடிவு செய்தார். அதன் படி, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

SHARE