பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் புதிய சாதனை ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முதல் வெற்றி…

332
 

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் நேற்றை லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தானின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது இர்பான், வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

ஒரே அணியில் இரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு போட்டியில் தலா 4 மற்றும் அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.

உலகக்கிண்ண போட்டியில் ஒரே ஆட்டத்தில் அரைசதம் அடித்து 4 விக்கெட்டுகளும் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் தான்.

ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் சதரா வீசிய 10 ஓவர்களில் 40 பந்துகளில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டம் ஏதும் எடுக்கவில்லை.

இந்த உலகக்கிண்ண போட்டியில் சதரா இதுவரை ஓட்டங்கள் விட்டுக்கொடுக்காமல் 138 பந்துகள் (டாட் பந்து) வீசியிருக்கிறார். இந்த வகையில் நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் (140 டாட் பந்து) முதலிடத்தில் உள்ளார்.

SHARE