பாக்கியலட்சுமியில் ராதிகாவிற்கு தெரியவரும் கோபி பற்றிய உண்மை-

27

 

பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட்டான தொடர். சங்கீதா மோகன் எழுத்தில் உருவாகும் இந்த தொடர் ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இதில் பாக்கியா என்ற கதாபாத்திரத்திற்கு தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது, அதேசமயம் அவரது கணவராக நடிக்கும் கோபிக்கு பெரிய எதிர்ப்பு இருக்கிறது.

சமூக வலைதளங்களில் பலரும் தகாத முறையில் திட்டி வருகிறார்கள், தொடரை பொழுதுபோக்காக மட்டும் பாருங்கள், இப்படியெல்லாம் திட்ட வேண்டாம் என அவர் பல முறை வீடியோ வெளியிட்டு விட்டார்.

ஆனால் அவர் மீது மக்கள் நிஜமாகவே வெறுப்பு காண்பிப்பது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.

பாக்கியலட்சுமியில் ராதிகாவிற்கு தெரியவரும் கோபி பற்றிய உண்மை- யார் சொன்னது தெரியுமா, பரபரப்பான புரொமோ

கதைக்களத்தில் அடுத்த திருப்பம்

இத்தனை நாட்களாக தனது குடும்பத்தை ஏமாற்றி வரும் கோபியின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிய வர இருக்கிறது. மூர்த்தி மற்றும் தனம், ராதிகாவின் வீட்டிற்கே சென்று நீங்கள் நினைப்பது போல் கோபி நல்லவர் கிடையாது என கூறுகின்றனர்.

அநேகமாக அவர்கள் உண்மையை ராதிகாவிடம் கூறிவிடுவார்கள் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் அடுத்த வாரத்திற்காக வந்தள்ள புரொமோவில், மூர்த்தி ராதிகாவிடம், நீங்கள் திருமணம் செய்ய நினைக்கும் கோபி நல்லவர் கிடையாது என்கின்றனர். அடுத்து என்ன நடக்கும் என்பதை அடுத்த வாரத்தில் காணலாம்.

SHARE