பாடகர் எஸ்.பி.பி. சரணுக்கு நடிகையுடன் திருமணமா?- புகைப்படம் வைரல்

8

 

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஒரே ஒரு மகன், அவரது பெயர் எஸ்.பி.பி. சரண். இவரும் தமிழ் சினிமாவில் நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக இருந்து கலக்கி இருக்கிறார்.

இப்போது அவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார், தமிழில் சூப்பர் சிங்கர் ஷோவில் நடுவராக இருக்கிறார்.

புதிய போஸ்ட்

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை சோனியா அகர்வாலுடன் எடுத்த புகைப்படம ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு புதிய விஷயம் என பதிவிட ரசிகர்கள் அனைவருமே ஒரே விஷயத்தை தான் கூறினார்கள்.

அதாவது இருவருக்கும் திருமணமா நல்ல விஷயம், வாழ்த்துக்கள் என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் சென்றார்கள்.

ஆனால் உண்மையில் விஷயம் திருமணம் எல்லாம் இல்லை, எஸ்.பி.பி. சரண், சோனியா அகர்வால், அஞ்சலி, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் ஒரு வெப் சீரியஸில் நடிக்கிறார்களாம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் சரண் ஷேர் செய்திருக்கிறார்.

SHARE