பாடசாலை மாணவர்களின் பருவச் சீட்டு தொடர்பில் கருத்து

79
பாடசாலை மாணவர்களின் பருவச் சீட்டுக் கட்டணத்தை சுமார் 25 வீதத்தால் அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து இன்று பாராளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பதில் அளித்தார்.

கேள்வி – பாடசாலை மாணவர்களின் பருவச் சீட்டு கட்டணத்தை 25% – 30% வரை உயர்த்தப் போவதாக கூறியுள்ளீர்கள். பெற்றோர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளதால், கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

“இரண்டு விஷயங்களை நாம் தேர்வு செய்யலாம். பெரிதும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிக பேருந்துகளை வழங்கி, அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதா? அல்லது இருக்கும் பேருந்துகளுக்கு எரிபொருள் செலவைக் கூட தேடிக் கொள்ள முடியாமல் அந்த பேருந்துகளையும் நிறுத்துகிறோமா? என்ற இரண்டு தீர்மானங்களில் ஒன்றை எடுக்க வேண்டி ஏற்படும். ஒரு நல்ல முடிவை எடுப்போம். தற்போதுள்ள மு​றையை தொடர்ந்தும் பராமரித்து பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைப்பதா? இல்லை என்றால், மூன்றில் இரண்டு பங்கு மானியத்தை அரசு தந்து, மூன்றில் ஒரு பங்கு பெற்றோர்களால் ஏற்கப்பட்டு, இந்த சேவையை விரிவுபடுத்தி மேலும் வழங்குவதா என்பது குறித்து புள்ளி விவரங்களுடன் தொடர்ந்து விவாதிப்போம். – ada derana

SHARE