பாடசாலை விடுமுறை நாட்களில் சிறப்பு தொடருந்து சேவைகளை

37

 

டிசம்பர் மாத வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் சிறப்பு தொடருந்து சேவைகளை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறை வரையிலும், கண்டியில் இருந்து பதுளை வரையிலும் சிறப்பு தொடருந்து சேவைகள் சேர்க்கப்பட உள்ளன.

டிசம்பரின் நீண்ட வார இறுதியில் சனி 23, ஞாயிறு 24, திங்கள் 25 (கிறிஸ்துமஸ்), செவ்வாய் 26 (பௌர்னமி) ஆகிய தினங்களில் சிறப்பு விடுமுறை காணப்படுகின்றமையினால் பொது மக்களின் நலனுக்காக சிறப்பு தொடருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE