பாடாய்ப்படுத்திய டிராவிட்.. ஹீரோவாக்கிய சச்சின்: நடிகைகளுடன் காதலை வளர்த்து இளம் பெண்ணை மணந்த அக்தர் (வீடியோ இணைப்பு)

272
து
தனது வேகத்தால் எதிரணியை கதிகலங்க வைத்தவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோகிப் அக்தர்.150கி.மீ வேகத்தில் வரும் இவரது பந்து எப்படிப்பட்ட ஜாம்பவானையும் தாண்டி ஸ்டெம்பை பதம்பார்த்து விடும்.இவர் பந்தை எறியும் விதம், அனல் பறக்கும் வேகத்தில் சீறிவரும் பந்து ஆகியவற்றால் இவருக்கு “ராவால்பிண்டி எக்பிரஸ்” என்ற பெயர் உண்டு.1997ம் ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய அக்தர் பல சாதனைகளை குவிக்க ஆரம்பித்தார்.

ஏழை குடும்பத்தில் பிறந்த அக்தர் தனது திறமையால் பாகிஸ்தான் அணியில் தனக்கென ஒரு நிரந்த இடத்தை பிடித்தார்.

1997ம் ஆண்டு தனது சொந்த ஊரில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார்.

தொடரந்து 1998ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் மிரட்டினார்.

1999ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் எதிரணி வீரர்களை கலங்கடித்தார்.

ஜாம்பவான்களை வீழ்த்திய சூப்பர்மேன்:-

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆசிய டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர்களான டிராவிட், சச்சின் ஆகியோரை அடுத்தடுத்து தனது யாக்கர் பந்தால் வெளியேற்றினார்.

தற்போது கூட டிராவிட்டை ஆட்டமிழக்க வைப்பது எனக்கு எப்போது மிகப் பெரிய கனவாக இருக்கும் என்று அக்தர் கூறுவார்.

இதுபற்றி அவர் சமீபத்தில் கூறிய பேட்டியில், டிராவிட் களத்தில் அனைவரையும் வெறுப்பேற்றி விடுவார்.

அவருக்கு பந்துவீசி நான் அலுத்துப் போய் விடுவேன். அந்த அளவு களத்தடுப்பாளர்களையும், பந்துவீச்சாளர்களையும் பாடாய்படுத்தி விடுவார். எனவே அவரை ஆட்டமிழக்க வைப்பது என்பது தனது கனவு என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் சச்சினை ஆட்டமிழக்க செய்து தான் சூப்பர் ஹீரேவாக உருவெடுத்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்த சர்ச்சைகள்:-

கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தாலும் பல சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டவர் அக்தர்.

கடந்த 2005ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான நடத்தை காரணமாக பாதியிலே வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அதற்கு அடுத்த வருடமே ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தடைபெற்றார். பின்னர் மேல்முறையீட்டால் அதிலிருந்து தப்பினார்.

2007ம் ஆண்டு சக வீரர் முகமது அசிப் உடன் சண்டையிட்டு தடை பெற்றார். 2008ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த்தால் அவருக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இந்த தடையை லாகூர் நீதிமன்றம் நீக்கி உத்தவிட்டது. அதுமட்டுமல்லாது ‘பாகிஸ்தானின் ஹீரோ அக்தர்’ என்று நீதிபதி ரானா பாராட்டு தெரிவித்திருந்தார்.

இவர் ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளையும், டெஸ்டில் 178 ஓட்டங்களையும் வீழ்த்தினார். 2011ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

நடிகைகளுடன் தொடர்பு:-

பாகிஸ்தானின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்ததால் பல பெண்களுடன் அக்தர் கிசுகிசுக்கப்பட்டார்

2010ம் ஆண்டு ஆரம்பத்தில் இவர் இந்திய நடிகை டயா மிர்சாவுடன் தொடர்பில் இருப்பதாக பேசப்பட்டது. திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்தி பரவியது.

இந்நிலையில் அந்த நடிகை இந்த செய்தி தவறானது என்றும், தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து அக்தர், பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக் உடன் கிசுகிசுக்கப்பட்டார். பிறகு மற்றொரு பாகிஸ்தானி நடிகை மீராவுடன் ஒன்றாக சுற்றித் திரிந்தார். இவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பிறகு பிரிந்துவிட்டனர்.

இதனையடுத்து மீண்டும் இந்திய நடிகை புஜா அகர்வாலை காதலித்தார். ஆனால் கடைசியில் அதுவும் நிலைக்கவில்லை.

இறுதியில் தனக்கு 38 வயதிருந்த போது 20 வயது பெண்ணான ருபாப் கான் என்பவரை மணந்து கொண்டார்.

SHARE