பாண்டிராஜ் சிம்பு ரசிகர்களை சமாதனப்படுத்தியுள்ளார்.

323

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து கொண்டிருக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படம் கடந்த சில மாதங்களாகவே படப்பிடிப்பு நடக்காமல் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.

இதில் குறிப்பாக பாண்டிராஜ், சிம்பு தரப்பு எதையும் திருப்தியாக செய்யவில்லை, பணமே தரவில்லை என புகார் கொடுத்தார். இதனால், சிம்பு ரசிகர்கள் கோபமாக அவரை திட்ட, தற்போது அவர்களை சமாதனப்படுத்தும் விதமாக டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.

இதில் ‘இது நம்ம ஆளு படம் என் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம், சிம்புவை இப்படத்தில் வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்கலாம், விரைவில் இப்படம் திரைக்கு வரும்’ என கூறியுள்ளார்.

SHARE