பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி

89

 

இலங்கையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு விஜயம் செய்திருந்த போது அவர் இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்த பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 100 பேருக்கு இந்த விசேட துப்பாக்கிச் சூட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

போதைப்பொருள் இல்லாதொழிக்கப்படும்
எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதியில் இந்த நாட்டிலிருந்து போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இல்லாதொழிக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

SHARE