பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவும் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக அப்பியாச புத்தகங்கள், கணனிகள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்கும் வைபவம் என்ற போர்வையில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் தலையிட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு படையின் சேவா வனிதா பிரிவினால் இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இது குறித்து அரச இணையத்தளமும் செய்தியை வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த வைபவம் எங்கு நடைபெறுகிறது என்பதை அந்த இணையத்தளம் வெளியிடவில்லை.
– See more at: http://www.newstamilwin.com/show-RUmszCSZKanv2.html#sthash.pGff2WtM.dpuf