பாதுகாப்புச் செயலாளர் மத அமைப்புகளை மாதாந்தம் சந்திக்க தீர்மானித்துள்ளார்.

405

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மாதாந்தம் பௌத்தம் உட்பட அனைத்து மத அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார்.

இராவணா பலய அமைப்புடன் கடந்த 5 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இந்த தீர்மானத்தை அறிவித்ததாக இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மத நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் ஐக்கியத்தை பாதுகாப்பதற்கு சகலரிடமும் இந்த புரிந்துணர்வு இருக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கூறியதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான புரிந்துணர்வின்மையே அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுக்கு காரணமாக அமைந்தது என தெரிவித்த பாதுகாப்புச செயலாளர், மத விவகார பொலிஸ் பிரிவு குறித்து உடனடியாக தீர்மானிக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் இராவணா பலய அமைப்பின் செயலாளர் கூறியுள்ளார்.

 

SHARE