பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன;

393
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கள இணையத்தளமொன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்குரிய பொறுப்பை கோத்தபாயவின் விசுவாசியான பொலிஸ் உயரதிகாரி அநுர சேனநாயக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில், கோத்தாவும் அநுரவும் இணைந்து பல இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக தற்போது பொலிஸ்மா அதிபராக உள்ள என்.கே. இளங்கக்கோனை பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அந்த இடத்தில் அநுர சேனநாயக்காவை அமர்த்த கோத்தபாய திட்டமிட்டுள்ளாராம்.

எதிர்வரும் டிசம்பருக்கு முன்னர் அவரை பதவியில் அமர்த்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில் எதிர்வரும் பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தான் விரும்பியபடி செயற்படுவதற்கு கோத்தபாய எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அநுர சேனநாயக்காவை அப்பதவியில் அமர்த்துவதற்கு சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும், இரண்டு முறை பதவிநீடிப்பு வழங்கப்பட்டுள்ளமையே  இதற்கு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரை வேறு வழிகளில் நியமிக்கும் திட்டமும் கோத்தாவிடம் காணப்படுகின்றது.

எனினும் 9 மூத்த பொலிஸ் அதிகாரிகள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மூன்றாவது தடவையாக பதவி நீடிப்பு வழங்குவது தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் இது குறித்து நீதிமன்றம் செல்லதிட்டமிட்டுள்ளனர் என அவ்விணையத்தளத்தில் குறிப்பிடப்படடுள்ளது.

இதேவேளை, கறுவாத்தோட்டத்தில் ஆடம்பர பங்களா ஒன்றை அநுரவிற்கு கோத்தபாய வழங்கியுள்ளார்.

இரவு நேரங்களில் ஆடம்பர விருந்துகள் இடம்பெறுகின்றன. இந்த விருந்துகளுக்கு இலங்கையின் முக்கிய வர்த்தக புள்ளிகளே அழைக்கப்படுகின்றனர்.

இந்த விருந்துபசாரங்களின் போது அநுர சேனநாயக்கா கோத்தா தேர்தலில் போட்டியிடவுள்ளது குறித்து பகிரங்கமாக அறிவித்து வருவதுடன் அவருக்கு ஆதரவு வழங்குமாறு கோரிவருகின்றார் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE