பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் இந்திய கரையோர காவல்துறையினர் நேற்று தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை ஒன்றை நடத்தினர்.

454
பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் இந்திய கரையோர காவல்துறையினர் நேற்று தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை ஒன்றை நடத்தினர்.

இதன்போது எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவாக எவ்வித நிகழ்வுகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

அவ்வாறான நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுமானால் அது எதிர்காலத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்று கரையோர காவல்துறையினர் குறிப்பிட்டனர் என்று தெ ஹிந்து தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிதாக எவரினதும் நடமாட்டங்கள் இருக்குமானால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கரையோர காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமி;ல் 454 குடும்பங்கள் வசிக்கின்றன.

SHARE