பாராளுமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் – ஆர்ப்பாட்டகாரர்களை சந்தித்த சஜித்!

86

 

பல சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட 60,000 பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டத்தில் அரச அதிகாரிகளினால் விடுபட்ட தவறுகள் மற்றும் குறைபாடுகளினால் 465 பட்டதாரிகள் வேலையிழந்து பல வருடங்கள் கடந்துள்ளன என்றும், இது தொடர்பில் தான் தொடர்ந்து பாராளுமன்றத்திலும், அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்களிலும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு தெரியப்படுத்தினாலும், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரும் இந்த பிரச்சினையை முடிவுக்கொண்டு வருவதாக அறிவித்துள்ள போதிலும், இன்னும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இவர்கள் இவ்வாறு வேலை இழந்துள்ளனர் என்றும், இதற்குக் காரணமானவர்கள் வேண்டுமென்றே அவர்களுக்கு வழங்க வேண்டிய வேலைகளை வழங்காமல் அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்றும், இது கீழ்த்தரமானதும் நியாயமற்றதுமான செயல் என்றும், இதன் காரணமாக அவர்களின் மனித உரிமைகள் கூட மீறப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் வேலை இழந்த 465 பட்டதாரிகள் இன்று (20) பாராளுமன்ற வளாகத்திற்கு அண்மித்த வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்துக்குச் சென்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வார்ப்பாட்ட இடத்திற்குச் செல்வதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விடயத்தை நாளை மீண்டும் பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

SHARE