கடந்த பல வருடங்களாக தமிழினத்தின் விடிவிற்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் சுயகௌரவத்துடன் வாழவேண்டும் என்றே இம் மண்ணிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தனர். அப்போராட்டத்திற்குக் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிங்கள இனவாதக் கட்சிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளின் ஊடாக திட்டமிட்ட சதி முயற்சிகளில் ஈடுட்டுள்ளன.
கூட்டமைப்பின் வாக்குகளைத் தாண்டி இந்த ஜனநாயக் கட்சிகளினால் வெற்றிபெறமுடியாது என்பது நன்கு தெரியும். இருந்தபோதிலும் விடுதலைப்புலிகளினுடைய ஜனநாயகக் கட்சி தேர்தல் கலத்தில் இறங்கி ஆசனங்களை கைப்பற்றாத பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்று உலகநாடுகளுக்குக் காட்டுவதற்கு இலகுவாக அமைந்துவிடும். தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய பிரதிநிதிகள், போராளிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தவறல்ல. அதற்கு இந்த காலகட்டம் உகந்ததாக அமையப்பெறவில்லை. சிங்கள பேரினவாதத்தின் சிந்தனையின் அடிப்படையிலேயே வித்தியாதரனும், அவர் சார்ந்த போராளிகளும் செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழீழ விடுதலைப்புலிகளைச் சார்ந்தவர்கள் இரண்டாராயித்துக்கும் மேற்பற்டோர் இன்னமும் பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னமும் விடுதலைசெய்யப்படவில்லை. இற்றவரைக்கும் பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதற்கும் ஒரு முடிவில்லை. இப்படி இருக்கின்ற பொழுது ஒரு ஜனநாயகப் பாதையில் நாமும் போட்டியிடுகின்றோம் என்று முன்வந்தமையானது சந்தேகத்தைத் தோற்றுவிப்பதோடு, சிறைகளில் வாடும் முன்னால் போராளிகளின் நிலை என்னவாகும் என்பதும் கேள்விக்குறியாகின்றது.
ஆலம் அறிந்து தான் வித்தியாதரன் குழுவினர் காலை விடுகின்றனரா? அல்லது சிங்கள இராணுவத்துடன் இணைந்து செயற்படப்போகின்றார்களா? இவர்களுக்கும் இனவாதக் கட்சிகளுக்குமிடையே ஒற்றுமை காணப்படுகின்றதே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குழைக்கும் நடவடிக்கையாகவே விடுதலைப்புலிகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய வருகை அமையப்பெறுகின்றது. ஆய்வாளர்களுடைய கருத்தும், அரசியல் ராஜதந்திரிகளின் கருத்தும், முன்னாள் விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளின் கருத்தும் இவ்வாறு அமையப்பெறுகின்றது.
முதலாவது கட்ட நடவடிக்கையாக இந்த ஜனநாயகப் போராளிகள் மக்கள் மத்தியில் ஒரு அபிவிருத்தி வேலையைச் செய்வதென்பது அவசியம் பெறுகின்றது. சிறையிலிருக்கின்ற அனைத்துப் போராளிகளும் பயங்கரவாதச் தடைச்சட்டம் இன்றி விடுதலைசெய்யப்படவேண்டியதும் அவசியம் பெறுகின்றது. புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகளுடைய வேலை வாய்ப்புக்;கள் உறுதிப்படுத்தப்படவேண்டும். போரினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாக வாழ்ந்து வருவோரின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை செயற்படுத்துவதன் ஊடாகவே ஒரு மாற்றத்தை உருவாக்கலாமே ஒழிய ஜனநாயகப் போராளிகள் என்ற பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றி, சிங்கள அரசுக்கு ஒட்டுக்குழுக்களாக செயற்படுவதை தவிர்த்துக் கொள்வதே மேல்.